நியூயார்க்: நியூயார்க்கின் மையப்பகுதியில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமையன்று தீபாவளிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்திய சமூகத்தைச் சேர்ந்த அமெரிக்க குடிமக்கள் ஏராளமானோர் இந்தக் கொண்டாடத்தில் கலந்துகொண்டனர். இந்தியக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அந்த இடமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சியளித்தது.
இந்நிகழ்ச்சியில் நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ், நியூயார்க் மாநில பிரதிநிதி ஜெனிஃபர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

