தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க மாநிலத்தில் தீபாவளி விடுமுறை

1 mins read
2daf8223-2852-4a79-905d-a66c45d795f9
2022ஆம் ஆண்டின் தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கி வைத்தார். துணை அதிபர் கமலா ஹாரிசும் அந்நிகழ்வில் பங்கேற்றார். - கோப்புப் படம்: சமூக ஊடகம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் தீபாவளி பண்டிகையை அரசு விடுமுறையாக அறிவித்து உள்ளது. அதற்கான உத்தரவில் மாநில ஆளுநர் ஜோஷ் ஷேபிரோ கையெழுத்திட்டு உள்ளார்.

மாநிலத்தின் பல இன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் பென்சில்வேனியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அன்றைய தினம் மூடவேண்டிய அவசியமில்லை என்று ஆளுநர் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த விடுமுறை, தீபாவளிப் பண்டிகையின் கலாசார முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதுடன் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மாநில மக்கள் அனைவரையும் கொண்டாட்டங்களில் பங்கேற்க ஊக்குவிக்கிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கர்களுடன் இந்துக்கள், சீக்கிய, சமண, பௌத்த சமயத்தவரையும் உள்ளடக்கிய பலதரப்பட்ட மக்கள் வாழும் மாநிலம் பென்சில்வேனியா என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்