தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப் நாடாளுமன்ற உரை: ஜனநாயகக் கட்சி உறுப்பினர் வெளியேற்றம்

1 mins read
d4392d57-5f0d-4d0f-9a91-5c54dcf529ca
அதிபர் டோனல்ட் டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்தபோது எழுந்து நின்று அவருக்கு எதிராகக் குரல் எழுப்பி, அவரை நோக்கி தமது கைத்தடியை அசைத்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அல் கிரீன் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். - படம்: இபிஏ

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (மார்ச் 5) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அதிபர் டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்தபோது எழுந்து நின்று அவருக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அல் கிரீன் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் அதிபர் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நிற்பது மரபல்ல.

அதிபர் டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவருக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் திரு கிரீனும் ஒருவர்.

எழுந்து நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பியதும் மட்டுமல்லாமல், அதிபர் டிரம்ப்பை நோக்கி தமது கைத்தடியை திரு கிரீன் அசைத்தார்.

அதிபர் உரையாற்றிக்கொண்டிருப்பதாகவும் இருக்கையில் அமரும்படியும் திரு கிரீனுக்கு அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் மைக் ஜான்சன் உத்தரவிட்டார்.

ஆனால் திரு கிரீன் அந்த உத்தரவைப் புறக்கணித்தார்.

இதையடுத்து, திரு கிரீன் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்