ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம்: புட்டினின் வீட்டை உக்ரேன் தாக்கியதாகக் கூறப்படுவதை தாம் நம்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
“தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுவதை நான் நம்பவில்லை,” என்று ஞாயிற்றுக் கிழமை ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அவருடன் பயணம் செய்த செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார்.
ஃபுளோரிடாவிலிருந்து வாஷிங்டனுக்குச் செல்லும் வழியில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“புட்டின் வீட்டு அருகே நடந்திருக்கலாம். ஆனால் இதற்கும் புட்டின் வீடு தாக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கும் தொடர்பில்லை,” என்றார் அவர்.
முன்னதாக புட்டின் வீட்டை 91 நீண்ட தூரம் பாயக்கூடிய ஏவுகணைகளைக் கொண்டு உக்ரேன் தாக்கியதாக மாஸ்கோ குற்றம் சாட்டியிருந்தது.
இதனால் உக்ரேன் போருக்கு முடிவு கட்டும் அமெரிக்காவுடனான பேச்சை மறுபரிசீலனை செய்யப் போவதாக ரஷ்யா கூறியது.
அதிபர் புட்டின் வீடு தாக்கப்பட்டதாக ரஷ்யா கூறுவதை உக்ரேனும் மேற்கத்திய நாடுகளும் மறுத்துள்ளன.

