ஹாங்காங்: சீனாவில் நீண்ட காலமாக நிலவி வரும் ஊழல் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் 2024ஆம் ஆண்டில் 4,000 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீனாவின் உயர்மட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு ஜனவரி 10ஆம் தேதி தெரிவித்தது.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு ஊழல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அது அதிகரித்து வருகிறது என்று ஜனவரி 6ஆம் தேதி மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணையத்தின் மூன்று நாள் மாநாட்டின் தொடக்கத்தில் அதிபர் ஸி ஜின்பிங் கூறினார்.
2024ஆம் ஆண்டில், மத்திய வங்கியின் துணை ஆளுநர் மற்றும் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய உயர்மட்ட விசாரணையால் சீனா முழுவதும் அதிர்ச்சி அலை ஏற்பட்டது.
2024ஆம் ஆண்டில் 73 மாகாண மற்றும் அமைச்சர் நிலையிலான அதிகாரிகள் மற்றும் 4,348 துறை சார்ந்த மற்றும் முக்கிய அதிகாரிகள் மீது ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஒழுக்கத்தை கடைப்பிடிக்காததற்காக 680,000 பேர் மற்றும் ‘நிர்வாகத் தடைகளாக உள்ளனர்’ என்று கூறி 270,000 பேர் உட்பட மொத்தம் 889,000 பேர் தண்டிக்கப்பட்டனர்.

