ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை கண்டுபிடிப்பு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை கண்டுபிடிப்பு

2 mins read
84b6bcfd-3a09-4721-a64e-c9cdc2a7d4df
கி.பி. 800 - 1,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகக் கருதப்படும் கல்லறை பனாமாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

பனாமா சிட்டி: மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் மனித எச்சங்களுடன் கூடிய, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறையைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதனுடன், தங்கம் மற்றும் பீங்கானால் ஆன கலைப்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டதாக அந்த ஆய்வுக் குழுவின் தலைமை ஆய்வாளர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) தெரிவித்தார்.

தலைநகர் பனாமா சிட்டிக்குத் தென்மேற்கே ஏறக்குறைய 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாட்டா மாவட்டத்தில் ‘எல் கேனோ’ பகுதியில் அக்கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.

கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் மட்பாண்டங்களும் தங்க அணிகலன்களும் கண்டெடுக்கப்பட்டன.
கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் மட்பாண்டங்களும் தங்க அணிகலன்களும் கண்டெடுக்கப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக அப்பகுதியில் அகழாய்வு நடந்துவரும் நிலையில், ஹிஸ்பானிய காலத்திற்கு முந்தைய பண்பாடுகள் தொடர்பான எச்சங்களை அறிவியலாளர்களும் தொல்லியல் வல்லலுநர்களும் ஏற்கெனவே கண்டுபிடித்துள்ளனர்.

பாரம்பரிய உருவங்களாலான தங்க அணிகலன்களாலும் மட்பாண்டங்களாலும் சூழப்பட்ட நிலையில், அந்த எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால், அவை சமூகத்தில் உயர்நிலையில் இருந்தவர்களுடைய எச்சங்களாக இருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர் ஜூலியா மாயோ தெரிவித்தார்.

அந்தக் கல்லறை கி.பி. 800க்கும் 1,000க்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் மட்பாண்டங்களும் தங்க அணிகலன்களும் கண்டெடுக்கப்பட்டன.
கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் மட்பாண்டங்களும் தங்க அணிகலன்களும் கண்டெடுக்கப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

இரு கைக்காப்புகள், இரு காதணிகள், வௌவால் மற்றும் முதலை உருவம் தாங்கிய மார்பணிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாகத் திருவாட்டி ஜூலியா கூறினார்.

அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட எல் கேனோ பகுதியானது, எட்டு முதல் 11ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பனாமாவின் மையப் பகுதியில் வாழ்ந்த சமூகங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

“இங்குதான் 200 ஆண்டுகளாக அவர்கள் இறந்தவர்களைப் புதைத்தனர்,” என்றார் திருவாட்டி மாயோ.

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்ற ஒன்பது கல்லறைகள் இதற்குமுன் அதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இந்நிலையில், பனாமா தொல்லியல் துறைக்கு இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு என்று அந்நாட்டின் பண்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்