ஹோர்முஸ் நீரிணையைச் செயல்படுத்த பல நாடுகளின் ராணுவ நிபுணர்கள் கலந்துரையாடல்

ஹோர்முஸ் நீரிணையைச் செயல்படுத்த பல நாடுகளின் ராணுவ நிபுணர்கள் கலந்துரையாடல்

1 mins read
4c1be5f7-127a-4db4-8dd2-850736f223db
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான முயற்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று தாம் நம்புவதாகச் சொன்னார் பிரிட்டி‌ஷ் தற்காப்பு அமைச்சர் ஜான் ஹிலே. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான வழிகளை ஆராய 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ராணுவ நிபுணர்கள் லண்டனில் கூடவிருப்பதாகப் பிரிட்டி‌ஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் கலந்துரையாடலில் விரிவான திட்டங்களையும் நிபுணர்கள் வரையவிருக்கின்றனர்.

ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்க பிரிட்டனும் ஃபிரான்சும் இணைந்து மேற்கொள்ளும் அனைத்துலக முயற்சியில் இணைய பல நாடுகள் கடந்த வாரம் முன்வந்தன.

கடந்த வாரம் கலந்துரையாடப்பட்ட விவகாரங்களில் எந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்தில் பேசவிருப்பதாகப் பிரிட்டி‌ஷ் தற்காப்பு அமைச்சு சொன்னது.

அடுத்த இரண்டு நாள்களில் கலந்துரையாடல் மூலம் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளதாகப் பிரிட்டி‌ஷ் தற்காப்பு அமைச்சர் ஜான் ஹிலே கூறினார்.

ஏற்ற சூழல் அமையும்போது ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ராணுவத் திட்டங்களைத் துரிதப்படுத்தவிருப்பதாகப் பிரிட்டன் குறிப்பிட்டது.

ராணுவத் திறன்கள், தளபத்தியம், கட்டுப்பாட்டுச் செயல்பாடுகள், ராணுவப் படைகளை வட்டாரத்தில் பணியமர்த்துவது ஆகியவை குறித்தும் ராணுவ நிபுணர்கள் பேசுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்