தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்: இன்னும் 12 பேரைக் காணவில்லை

1 mins read
0ee07d65-d663-4d3e-8995-77d319db05b1
சீனாவின் கான்சு மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காங்டியாவ் கிராமத்தில் மீட்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: வடமேற்கு சீனாவின் கான்சு மாநிலத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 18) 6.2 ரிக்டர் நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இன்னும் 12 பேரைக் காணவில்லை.

ஆனால், மீட்பு நடவடிக்கை இவ்வளவு விரைவில் முடிந்திருப்பது குறித்து இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கான்சு-கிங்ஹாய் மாநில எல்லை அருகே உள்ள மலைப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 15 மணி நேரத்தில், அதாவது செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தேடுதல், மீட்புப் பணி நிறைவு பெற்றுவிட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால், கிங்ஹாயில் தேடுதல் பணி தொடர்ந்ததா என்பது குறித்து தெரியவில்லை.

புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, கான்சுவில் 115 பேர் உயிரிழந்ததாகவும் 784 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமை இரவு 8.56 மணி நிலவரப்படி, கிங்ஹாயில் மரண எண்ணிக்கை 22ஆக உயர்ந்தது; 198 பேர் காயமுற்றனர்; 12 பேரைக் காணவில்லை.

நிலநடுக்கத்தால் 207,000க்கும் அதிகமான வீடுகள் சேதமுற்றன. கான்சுவில் மட்டும் கிட்டத்தட்ட 15,000 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் 145,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்