ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஆர்ப்பாட்டத்தின்போது மூண்ட கைகலப்பில் உணவு விநியோக ஓட்டுநர் மாண்டதை அடுத்து போராட்டங்கள் இன்னும் மூர்க்கமாகியுள்ளன.
வடக்கு சுமத்ராவில் உள்ள நாடாளுமன்றத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர். அவர்களில் மாணவர்களும் மோட்டர்சைக்கிள்களில் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் ஓட்டுநர்களும் அடங்குவர்.
கைகலப்பின்போது காவல்துறையின் கவச வாகனம் மோட்டார்சைக்கிள்மீது மோதியதில் 21 வயது அஃபான் குர்னியவான் உயிரிழந்தார். சம்பவத்தின்போது அஃபான் உணவு விநியோகம் செய்துகொண்டிருந்ததாக அவரது தாயார் கூறினார்.
“என் மகனைக் கொன்றவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கவேண்டும்,” என்று அஃபானின் 41 வயது தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
போக்குவரத்துச் சேவைகள் வழங்கும் கோஜெக் நிறுவனம் மாண்ட ஓட்டுநர் தமது நிறுவனத்திற்காக வேலை செய்யும் ஊழியர்களில் ஒருவர் என்பதை உறுதிசெய்தது.
மாண்டவரின் குடும்பத்துக்குத் தொடர்ந்து உதவிசெய்யவிருப்பதை கோஜெக் குறிப்பிட்டது.
இந்நிலையில், காவல்துறை அதிகாரிகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டுள்ளது.
ஜகார்த்தாவைத் தாண்டி மேடான், சுரபாயா ஆகிய பகுதிகளுக்கு ஆர்ப்பாட்டங்கள் விரிவடைந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மூண்ட கைகலப்பில் உணவு விநியோக ஓட்டுநர் ஒருவர் மாண்டதை அடுத்து போராட்டங்கள் வலுத்தன.
மோட்டார்சைக்கிளோட்டியின் மரணத்திற்காக இரங்கல் தெரிவித்த திரு பிரபோவோ, சம்பவம் தொடர்பிலான விசாரணைக்கு உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி மூண்ட ஆர்ப்பாட்டங்களை அடுத்து மக்கள் அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்ட திரு பிரபோவோ, அரசாங்கத்தைத் தொடர்ந்து நம்பும்படி கூறினார்.
மோட்டார்சைக்கிளோட்டியின் மரணத்தால் சினமடைந்த மாணவர்கள் ஜகார்த்தாவின் காவல்துறைத் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தனர்.
ஒட்டுமொத்த காவல்துறை சார்பாகவும் மன்னிப்புக் கேட்பதாகச் சொன்ன ஜகார்த்தா காவல்துறைத் தலைவர் எசெப் எடி சுஹாரி, கவச வாகனத்தில் இருந்த ஏழு பேரும் கைதுசெய்யப்பட்டனர் என்றார்.
காவல்துறை அதிகாரிகளின் வன்முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று இந்தோனீசியாவின் ஆகப் பெரிய மாணவர் சங்கத்தின் தலைவர் முஸம்மில் இசான், இதர மாணவர் குழுக்களும் அதில் பங்கெடுப்பர் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.
ஆகஸ்ட் 28ஆம் தேதி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம், கல்வி நிதி, அரசாங்கத்தின் பள்ளி உணவுத் திட்டம் போன்ற விவகாரங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மூண்டன.
ஆர்ப்பாட்டங்கள் இரவு நேரத்திலும் நீடித்ததை அடுத்து கலகத் தடுப்பு அதிகாரிகள் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகையையும் தண்ணீர்க் குண்டுகளையும் பயன்படுத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.