தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்

1 mins read
cd88776f-cf20-4df8-9474-84a1b9fb3c38
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5ஆகப் பதிவானது. - படம்: பிக்சபே

பெய்ஜிங்: சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தில் திங்கட்கிழமை காலை (மே 12) நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5ஆகப் பதிவானது.

திபெத்தின் ஷிகட்சே நகரில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இடத்துக்கு அவசரகாலப் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தோர் தொடர்பான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

கடந்த ஜனவரி மாதம் திபெத்தில், ரிக்டர் அளவில் 6.8ஆகப் பதிவான நிலநடுக்கம் திபெத்தைப் புரட்டிப்போட்டது.

அதில் 120க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

குறிப்புச் சொற்கள்