வாஷிங்டன்: உலகப் பணக்காரர்களில் ஒருவரான இலோன் மஸ்க் ஆச்சரியமான முறையில் முதல்முறையாக வெள்ளை மாளிகையில் காட்சியளித்தார்.
ஓவல் அலுவலகத்தில் அதிபர் டோனல்ட் டிரம்ப் அருகில் நின்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அரசாங்கத்தையே கையகப்படுத்திவிட்டதாகக் கூறப்படுவதை மறுத்த அவர், அரசாங்கச் செலவுகளைக் குறைப்பதே தமது பணி என்றார்.
மத்திய அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் பொறுப்பை இலோன் மஸ்க்குக்கு டோனல்ட் டிரம்ப் வழங்கியுள்ளார்.
இதையடுத்து எலான் மஸ்க்கின் ‘டோஜ்’ என்ற அரசாங்கச் செலவுகளைக் குறைக்கும் அமைப்புக்கு அரசாங்க ஊழியர்களைக் குறைப்பதற்கான அதிக அதிகாரம் வழங்கும் உத்தரவில் திரு டிரம்ப் கையெழுத்திட்டார்.
ஆனால் அந்த அமைப்பை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
வெளிப்படைத் தன்மையில்லை என்றும் சட்ட சவால்களை எதிர்நோக்குகிறது என்றும் அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இதற்கிடையே புதிய சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட அமெரிக்க கருவூலத்தின் பணம் செலுத்தும் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய இலோன் மஸ்க்கின் உதவியாளருக்குத் தவறுதலாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று துறை அதிகாரி ஒருவர் பிப்ரவரி 12ஆம் தேதி தெரிவித்தார். இலோன் மஸ்க்கின் 25 வயது ஊழியருக்கு அரசாங்கத்தின் டிரில்லியன் கணக்கான டாலரைக் கையாளும் அமைப்பில் மாற்றங்களைச் செய்ய உரிமை வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.