பெரும்பாலும் மார்ச் 29ல் தேர்தல்: தாய்லாந்து அரசாங்க அதிகாரி

1 mins read
b2556fda-b50e-4530-b397-76431bd218ae
தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்துப் பொதுத் தேர்தல் அநேகமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டின் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல் நாட்டின் தேர்தல் ஆணையத்துடன் கலந்துபேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அனுட்டின் முன்னதாகக் கூறியிருந்தார். அதற்குப் பிறகு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

“தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து அரசாங்கமும் தேர்தல் ஆணையமும் கலந்துபேசியுள்ளன,” என்று பிரதமர் அலுவலக அமைச்சரான பராடோர்ன் பிரிஸானானன்டுக்குல் கூறினார்.

“தேர்தல் பெரும்பாலும் மார்ச் 29ஆம் தேதி நடைபெறும்,” என்றார் அவர்.

தேர்தல் நடைபெறவுள்ள தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. அதேவேளையில் தேர்தல் ஆயத்தப் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வென்றதைத் தொடர்ந்து திரு அனுட்டின் தாய்லாந்துப் பிரதமராகப் பொறுப்பேற்றார். திரு அனுட்டின், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தாய்லாந்துப் பிரதமராகப் பொறுப்பு வகிக்கும் மூன்றாவது நபராவார்.

குறிப்புச் சொற்கள்