தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலைத் தாக்குதல்: உயிருக்குப் போராடிய யானை

1 mins read
0697acf8-7e39-4f77-a182-5255dee757aa
காணொளி ‘ஸாம்பெஸி தேசியப் பூங்காவில்’ எடுக்கப்பட்டது. - படம்: யூ டியூப்

முதலையால் தாக்கப்பட்ட யானை ஒன்று உயிருக்குப் போராடுவதைக் காட்டும் காணொளியைக் கண்டு பார்வையாளர்கள் திகிலடைந்துள்ளனர்.

ஸிம்பாப்வேயில் உள்ள ‘விக்டோரியா ஃபால்ஸ் சஃபாரி லாட்ஜ்’ல் பொருத்தப்பட்டிருந்த காணொளி ஒன்றில் அந்தக் காட்சி பதிவானது.

அந்தக் காணொளி யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

யானை, கூட்டத்துடன் ‘ஸாம்பெஸி தேசியப் பூங்காவில்’ உள்ள ஆற்றில் தண்ணீர் குடிக்கச் சென்றிருந்தபோது முதலை அதைத் தாக்கியது. யானைகள் பலமுறை முதலையால் அச்சுறுத்தப்பட்டதைக் காணொளியில் காணமுடிந்தது.

முதலை இருப்பதை அறியாத யானை ஒன்று முதலைக்கு அருகில் சென்றது.

முதலை யானையின் தும்பிக்கையின் முனையைக் கடித்தது. அதனைத் தொடர்ந்து, யானைக்கும் முதலைக்கும் இடையே பெரும் போராட்டம் ஏற்பட்டது.

யானை தலையை வேகமாக ஆட்டியதால், முதலை அதன் பிடியை விட்டது.

காணொளிக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் பதிவாயின.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்