வாஷிங்டன்: பெண் பயணி ஒருவரால் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம் ஜூன் மாதம் நிகழ்ந்தது.
விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது பெண்ணின் தலைமுடியில் பேன் ஊர்ந்து செல்வதை மற்ற பயணிகள் பார்த்துவிட்டனர்.
இச்சம்பவம் லாஸ் ஏஞ்சலிஸ்-நியூயார்க் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்ததாகவும் விமானம் ஃபீனிக்சில் அவசரமாகத் தரையிறங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, விமானம் திசைதிருப்பப்பட்டுள்ளது குறித்து விமானச் சிப்பந்திகள் அதிக தகவல்கள் அளிக்காததால் பயணிகளும் ஒன்றும் புரியாமல் விழித்தனர்.
விமானம் அவசரமாகத் தரையிறங்கியதை அடுத்து, ஒரு பெண் விடுக்கென எழுந்து விமானத்தின் முன்பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து பயணிகள் சிலர் தங்களுக்குள் ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டதாக டிக்டாக் பதிவு ஒன்றில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஈத்தன் ஜுடல்சன் குறிப்பிட்டார்.
வேகவேகமாகச் சென்ற அந்தப் பெண்ணின் தலைமுடியிலிருந்து பேன் வெளிவருவதை இரண்டு பயணிகள் பார்த்துவிட்டு விமானப் பணியாளர்களின் கவனத்திற்கு அதைக் கொண்டுவந்தனர்.
விமானம் ஃபீனிக்சை அடைந்ததும் 12 மணிநேர தாமதத்தைப் பயணிகள் எதிர்நோக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு ஹோட்டல் பற்றுச்சீட்டுகளும் தரப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பின்னர், உறுதிப்படுத்தும் விதமாக மருத்துவ நெருக்கடி காரணத்தால் விமானம் திசைதிருப்பப்பட்டதாக விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
பயணிகள் அதன் பின்னர் ஒருவழியாக லாஸ் ஏஞ்சலிசை சென்றடைந்தனர்.

