சீன ஆடவர் ஒருவருக்குத் தமது வேலையிடத்தில் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ஷ்டக் குலுக்கில் வெற்றி கிடைத்துள்ளது. அது இப்போது அந்நாட்டில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
சென்சாங் பகுதியில் உள்ள ஒரு நிறுவனம், தன் ஊழியர்களுக்காக ஆண்டுதோறும் ஒரு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சி நடக்காமலிருந்த நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி இரவு அந்நிறுவனம் நிகழ்ச்சியை நடத்தியது.
அதில் அதிர்ஷ்டக் குலுக்கில் வெல்லும் நபருக்கு ஓர் ஆண்டு முழுவதும் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நிறுவனத்தில் நிர்வாகியாக உள்ள ஊழியர் அந்த அதிர்ஷ்டக் குலுக்கில் வெற்றி பெற்றார்.
ஆடவர் ஆச்சரியம் தாங்காமல் மீண்டும் மீண்டும் அந்த பரிசு உண்மையா உண்மையா என்று கேட்கும் காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது.
தற்போது அந்த ஊழியருடன் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தெரிவித்தது.
அந்த ஆடவர் முழு ஆண்டுச் சம்பளமும் விடுமுறைக்கான ஊதியமும் பெற்றுக்கொண்டு வேலை செய்ய தயாரா என்று நிறுவனம் கேட்டு வருகிறது.