ஐரோப்பாவில் வரலாறு படைத்த இங்கிலாந்தின் கிரிஸ்டல் பேலஸ் அணி

ஐரோப்பாவில் வரலாறு படைத்த இங்கிலாந்தின் கிரிஸ்டல் பேலஸ் அணி

2 mins read
நான்கு குழுக்களை வென்று இறுதிப் போட்டியில் களமிறங்கிய கிரிஸ்டல் பேலஸ்
bbc1ab38-f5d6-44cb-9262-4be68fb57c0d
கிரிஸ்டல் பேலஸ் விளையாட்டாளர் சாடி ரியத், வெற்றிக் கிண்ணத்தை உயர்த்திப் பிடிக்க சக விளையாட்டாளர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். - படம்: இபிஏ
multi-img1 of 3

லீப்சிக்/ஜெர்மனி: ஜெர்மனியின் லீப்சிக் நகரில் புதன்கிழமை (மே 27) நடந்த ‘கான்ஃபரன்ஸ் லீக்’ இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் கிரிஸ்டல் பேலஸ் குழு ஸ்பெயினின் ராயோ வெலிகானோ குழுவை 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றது.

ஐரோப்பிய நாடுகளின் உள்நாட்டு லீக் காற்பந்து பட்டியலில் உச்ச நிலையை எட்டிய குழுக்கள் பங்கெடுக்கும் தனிப்பட்ட போட்டிகளில் ‘சாம்பியன்ஸ் லீக்’, ‘யூயிஎஃப்ஏ லீக்’ ஆகிய இரு போட்டிகள் அதிகப் புகழ்பெற்றிருந்தாலும் மூன்றாம் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த கான்ஃபரன்ஸ் லீக் போட்டித் தொடரும் அதே விறுவிறுப்பை தரும் என்பதை மறுக்கமுடியாது.

ஏனெனில், நீண்ட வரலாறும் வெற்றிக்கோப்பைகளை வென்ற அனுபவமும் உள்ள குழுக்கள் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்பது வழக்கம். இருப்பினும் சிறிய நிதி நிலையுடன், அதிக நட்சத்திரங்கள் இல்லாது, காற்பந்து லீக் பட்டியலில் பின்தங்கிய சாதாரண குழுக்கள் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை கான்ஃபரன்ஸ் லீக் போட்டி வழங்குகிறது.

அதன்படி, 2025ஆம் ஆண்டில் பிரிட்டனின் இங்கிலீஷ் ‘எஃப்ஏ’ கிண்ணத்தை வென்ற கிரிஸ்டல் பேலஸ் குழு, 2026ஆம் ஆண்டுக்கான ‘யூயிஎஃப்ஏ லீக்’ போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால் அக்குழுவின் உரிமையாளர் லியோன் எனப்படும் பிரான்ஸ் குழுவுக்கும் உரிமையாளராக இருந்தார். லியோன் குழுவும் ‘யூயிஎஃப்ஏ லீக்’ போட்டிக்குத் தகுதி பெற்றதால் விதிமுறைகள் முரண்பட்டு, கிரிஸ்டல் பேலஸ் குழு கான்ஃபரன்ஸ் லீக் போட்டியின் ‘நாக்அவுட்’ நிலை போட்டிக்குத் தள்ளப்பட்டது.

அதை பொருட்படுத்தாது, அந்தப் போட்டியைக் கடந்து, பதினாறு குழுக்களுக்கான போட்டி, கால் இறுதி, அரையிறுதி உட்பட நான்கு போட்டிகளில் வெவ்வேறு குழுக்களை வென்று இறுதிப் போட்டியில் களமிறங்கியது கிரிஸ்டல் பேலஸ்.

இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ராயோ வெலிகானோ குழுவை 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வென்று ஐரோப்பிய காற்பந்து வரலாற்றில் இடம்பிடித்து அதன் ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது கிரிஸ்டல் பேலஸ்.

குறிப்புச் சொற்கள்