டமாஸ்கஸ்: சிரியாவின் இட்லிப் நகர கிராமப் புறத்தில் நிகழ்ந்த வெடிப்பில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டனர், குறைந்தது 70 பேர் காயமுற்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வடமேற்கு சிரியாவில் நிகழ்ந்த அந்த வெடிப்பு குறித்து அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான சானா (SANA) ஊடகம் வியாழக்கிழமை (ஜூலை 24) செய்தி வெளியிட்டது. காரணம் தெரியாத இச்சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு குடிமைத் தற்காப்புப் படையினர் விரைந்து சென்றதாக சிரியாவின் அவசரகால, பேரிடர் நிர்வாக அமைச்சர் ராயிட் அல்-சாலே எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
சம்பவம் மாராட் மிஸ்ரின் பகுதியில் நேர்ந்தது. சிறிய அளவில் மேலும் வெடிப்புகள் இடையூறுகள் விளைவித்தபோதும் மீட்புப் பணிகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.