தோக்கியோ: ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள ஐச்சி மாநிலத்தில் ஆலை ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டது.
இதில் ஒருவர் மாண்டார்.
வெடிப்பின் காரணமாக இருவர் காயமடைந்தனர்.
இந்தத் தகவலை ஜப்பானிய அதிகாரிகள் வியாழக்கிழமை (மார்ச் 6) வெளியிட்டனர்.
வாகனப் பாகங்களை உற்பத்தி செய்யும் சுவோ ஸ்பிரிங் ஆலையில் வெடிப்பு ஏற்பட்டது.
தூசிகளைச் சேகரிக்கும் இயந்திரம் வெடித்ததாக அதிகாரிகள் கூறினர்,
2023ஆம் ஆண்டில் இந்த ஆலையில் இதே போன்ற வெடிப்பு ஏற்பட்டது.
வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

