தோஹாவில் வெடிப்புச் சத்தம்; பலர் வெளியேற்றம்

தோஹாவில் வெடிப்புச் சத்தம்; பலர் வெளியேற்றம்

1 mins read
cb18b8e7-1727-4784-9828-d2c56c7f86d5
வளைகுடா நாடுகள்மீதான வான்வழித் தாக்குதல்களை ஈரான் தொடர்கிறது. - படம்: ஏஎஃப்பி

தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் சனிக்கிழமை (மார்ச் 14) காலையில் வெடிப்புச் சத்தம் கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஏஎஃப்பி செய்தியாளர்கள் அந்தத் தகவலைத் தெரிவித்தனர்.

கத்தாரின் உள்துறை அமைச்சு முக்கியமான சில இடங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவதாகக் கூறியதைத் தொடர்ந்து வெடிப்புச் சத்தம் கேட்டது.

தோஹாவின் முக்கிய நகர்ப்பகுதியில் இரண்டு ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதைப் பார்த்ததாகச் செய்தியாளர் ஒருவர் கூறினார்.

வளைகுடா நாடுகள்மீதான வான்வழித் தாக்குதல்களை ஈரான் தொடர்கிறது.

கத்தாரைக் குறிவைத்த ஏவுகணையைத் தனது ராணுவம் இடைமறித்ததாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு சொன்னது. முன்னதாக, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சில இடங்களிலிருந்து மக்களை வெளியேற்றியதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

தலைநகரின் மத்திய வட்டாரமான மு‌ஷேய்ரெபில் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தோஹாவின் வடக்கே உள்ள லுசாய்ல் நகரில் உள்ள அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டின் தலைமையகத்தினுடைய நுழைவாயிலில் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தலைநகரின் மேற்கே உள்ள அல்-கராஃபா வட்டாரத்தில் அமெரிக்கத் தூதரகம் இருக்கும் பகுதிக்கு அருகே வசிப்போர், வெளியேற்ற நடவடிக்கை குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகக் கூறினர்.

குறிப்புச் சொற்கள்