மலேசியர்களுக்கு சலுகை விலையில் எஃப்1 நுழைவுச்சீட்டுகள் : அன்வார் அறிவிப்பு

மலேசியர்களுக்கு சலுகை விலையில் எஃப்1 நுழைவுச்சீட்டுகள் : அன்வார் அறிவிப்பு

1 mins read
ce90cbd4-6f42-4f3e-985f-34e64d00debe
எஃப்1 கார்ப் பந்தயத்தைக் காண மலேசியர்களுக்கு RM200 முதல் ‘மடானி’ சலுகை நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும் எனப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். - படம்: தி சன் டெய்லி
Google News Preferred Icon

கோலாலம்பூர்: செப்பாங் அனைத்துலகப் பந்தயத்தளத்தில்  நடைபெறவுள்ள ஃபார்முலா 1 (எஃப்1) மலேசிய கிராண்ட் பிரீ கார்ப் பந்தயத்தைக் காண விரும்பும் மலேசியக் குடிமக்களுக்கு RM200 முதல் சிறப்பு சலுகை விலையில் ‘மடானி’  நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்த பிரதமர், “எஃப்1 போன்ற உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுகளை மலேசிய நாட்டு மக்களும் எளிதாக நேரில் கண்டு களிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டார்.

இதன்படி, தேசிய அடையாள அட்டை (மைகாட்)  வைத்திருக்கும் மலேசியர்கள் அதிகாரபூர்வ இணையத்தளம் மூலம் தங்களின் அடையாளச் சான்றைப் பதிவிட்டு RM200 முதல் தொடங்கும் நுழைவுச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். 

உள்நாட்டு ரசிகர்களை ஊக்குவிக்கவும், அதே வேளையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்