தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீப்பற்றி எரிந்த ஆலை; சன்னல் வழியாகக் குதித்த சிறுவனைப் பிடித்துக் காப்பாற்றிய காவல்துறை அதிகாரி

1 mins read
612828d3-6758-417b-afd4-fefbb0fc94c1
புகையை சுவாசித்ததற்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அச்சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: இணையம்

சோல்: தென்கொரியாவில் உள்ள ஓர் ஆலை தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தபோது அக்கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள சன்னலில் இருந்து குதித்த தொடக்கப்பள்ளி மாணவனைக் காவல்துறை அதிகாரி ஒருவர் பிடித்துக் காப்பாற்றினார்.

இந்தச் சம்பவம் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

கியோங்கி மாநிலத்தில் உள்ள அந்த ஆலையின் மூன்றாவது மாடியில் தீ மூண்டதாக பியோங்டேக் காவல் நிலையம் கூறியது.

அக்கட்டடத்தில் இருந்தவர்களை காவல்துறை அதிகாரிகள் பத்திரமாக வெளியேற்றினர்.

ஆனால் சிறிது நேரம் கழித்து, சிறுவன் ஒருவனின் அழு குரல் கேட்டது.

அவன் இரண்டாவது மாடியில் இருந்தான்.

கட்டடம் முழுவதும் தீப்பிடித்துக்கொண்டதால் அதற்குள் அதிகாரிகளால் நுழைய முடியாமல் போனது.

அப்போது அதிகாரி ஒருவர் தம்மீது நம்பிக்கை வைத்து சன்னல் வழியாகக் கீழே குதிக்கும்படி சிறுவனைப் பார்த்து உரக்கக் கத்தினார்.

சன்னல் வழியாகக் குதித்த அச்சிறுவனை அவர் பிடித்துக் காப்பாற்றினார்.

புகையை சுவாசித்ததற்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அச்சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆலையில் மூண்ட தீயைத் தீயணைப்பாளர்கள் அணைத்ததாக அதிகாரிகள் கூறினர்.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்