வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரண குறித்து எஃப்பிஐ எனப்படும் அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நுழைந்தனர்.
விசாரணையில் அவர்களது பங்கு குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர்களிடம் பல கேள்விகள் அடங்கிய பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அவற்றுக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று ஞாயிற்றுகிழமையன்று (பிப்ரவரி 2) உத்தரவிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்களிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றுக்கான பதில்களைத் தேட சிரமப்படுகிறோம்,” என்று எஃப்பிஐயின் குற்றவியல் புலனாய்வுத்துறையின் உதவி இயக்குநர் திரு சாட் யார்புரோ கூறினார்.
எனவே, அதிகாரிகள் சிலர் பதவி நீக்கம் செய்யப்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

