வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து ஆறாம் நாளாக முடங்கியுள்ள நிலையில், குடியரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகக் கூறிய அதிபர் டிரம்ப், சில மணி நேரங்களில் பின்வாங்கினார்.
அமெரிக்க மக்களின் சுகாதாரப் பராமரிப்பு உதவித்தொகை தொடர்புடைய விவகாரத்தில் குடியரசுக் கட்சியினர் தங்கள் போக்கை மாற்றிக்கொண்டால்தான், அவர்களுடன் எவ்வித ஒப்பந்தமும் செய்துகொள்ளமுடியும் என்று திரு டிரம்ப் திங்கள்கிழமை (அக்டோபர் 6) தெரிவித்துள்ளார்.
“குடியரசுக் கட்சியின் தோல்வியுற்ற சுகாதாரத் திட்டங்களைச் சரி செய்திட அவர்களுடன் பணியாற்ற நான் விரும்புகிறேன். ஆனால் முடங்கியிருக்கும் அரசாங்கம் வழக்க நிலைக்குத் திரும்ப அவர்கள் அனுமதிக்கவேண்டும்,” என்று அதிபர் டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
காலாவதியாகவிருக்கும் கட்டுப்படியான சுகாதாரப் பராமரிப்புச் சட்டத்தை நீட்டிக்கவேண்டும் என்பது குடியரசுக் கட்சியின் நிலைப்பாடு. அதுபற்றி முதலில் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட திரு டிரம்ப், பிறகு பின்வாங்கியதுடன், எதிர்க்கட்சியினர் முதலில் அரசாங்கத்தை இயங்க வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
செய்தியாளர்களை வெள்ளை மாளிகையில் சந்தித்த அதிபர், ‘சரியான ஒப்பந்தத்தை’ செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும், குடியரசுக் கட்சியினருடன் அவரது அரசாங்கம் பேசி வருவதாகவும் கூறினார்.
அப்படி எவ்விதப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்று மறுத்த சிறுபான்மையினருக்கான தலைவர் செனட்டர் சக் ஷுமர், சுகாதாரப் பராமரிப்புச் சட்டம் நீட்டிக்கப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றார்.
அரசாங்கம் கடந்த வாரம் (அக்டோபர் 1 முதல்) முடங்கியதிலிருந்து, குடியரசுக் கட்சியினரும் ஆளும் ஜனநாயகக் கட்சியினரும் பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டையானதற்கும் பொதுச் சேவைகள் நிலைதடுமாறி போனதற்கும் ஒருவரை ஒருவர் பழி சொல்லி வருகின்றனர்.
‘ஒபாமாகேர்’ எனப்படும் முன்னாள் அமெரிக்க அதிபரின் பெயரில் இயங்கும் அந்த சுகாதாரப் பராமரிப்புத் திட்டம், இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகவுள்ளது.