‘விஇபி நடப்புக்கு வந்த பிறகு ஜோகூரில் குறைவான சிங்கப்பூரர்கள்’

1 mins read
a6635162-c3f2-496a-a944-0758adcc5eef
அக்டோபர் ஒன்றாம் தேதியன்று காஸ்வே கடற்பாலம். - படம்: பெரித்தா ஹரியான்

ஜோகூர் பாரு: வாகன நுழைவு அனுமதிக் கட்டண (விஇபி) முறை நடப்புக்கு வந்த பிறகு மலேசியாவின் ஜோகூர் பாரு நகருக்குச் செல்லும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அங்குள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில நாள்களாக பல சிங்கப்பூரர்கள் நிலம்வழி மலேசியா செல்வதைத் தவிர்த்து வந்துள்ளனர். இம்மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 20 விழுக்காடு குறைவான சிங்கப்பூர் வாகனங்கள் ஜோகூர் கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்பு ஆகிய நிலவழி எல்லைகளைக் கடந்ததாக மலேசியாவின் தி ஸ்டார் ஊடகம் தெரிவித்தது.

அந்நாட்டின் உள்துறை அமைச்சு அதிகாரியை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் அத்தகவலை வெளியிட்டது.

விஇபி விதிமுறையைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதை மலேசியா ஒத்திவைத்தது. கூடுதலான சிங்கப்பூர் வாகனமோட்டிகள் விஇபி அனுமதியைப் பெற வகை செய்வது அந்நடவடிக்கையின் நோக்கமாகும்.

அதன்படி விஇபி அனுமதி பெறாத சிங்கப்பூர் வாகனமோட்டிகளுக்கு எழுத்து வடிவில் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்படுகிறது.

இம்மாதம் மூன்றிலிருந்து ஐந்தாம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ஜோகூர் பாருவில் உள்ள கடைக்காரர்கள், கடைத்தொகுதிக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் சுமார் 20 பேரிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேசியது. கடந்த சில நாள்களாக வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று அவர்கள் கூறினர்.

‘பசார் கராட்’ எனும் இரவுச் சந்தையில் இம்மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து விற்பனை 30லிருந்து 40 விழுக்காடு சரிந்ததாக அங்குள்ள கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்