தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விலங்குகள் நிலையத்தில் தீச்சம்பவம்; 20 நாய்கள் பலி

1 mins read
2e7be9ea-079d-4bfb-bf9a-5feff4fc2c12
காயத்தால் பாதிக்கப்பட்ட நாய்க் குட்டிகளுக்குத் தீயணைப்பு வீரர்கள் முதலுதவி செய்தனர். - படம்: ஹாங்காங் அனிமல் போஸ்ட்

பெய்ஜிங்: ஹாங்காங்கில் உள்ள ஒரு விலங்கு வளர்ப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தால் 20 நாய்கள், ஆறு பூனைகள் மாண்டன.

நிலையத்தில் உள்ள குளுரூட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தீச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நிலையம் விலங்குகள் இனப்பெருக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் இடமாகும்.

இச்சம்பவம், புதன்கிழமை (செப்டம்பர் 17) பிற்பகல் 3.50 மணிவாக்கில் நியூ டெரிடரிஸ் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்ததாக ‘செளத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் தீயைப் பரவவிடாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் மனிதர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

காயத்தால் பாதிக்கப்பட்ட நாய்க் குட்டிகளுக்குத் தீயணைப்பு வீரர்கள் முதலுதவியும் செய்தனர்.

அதேபோல் விலங்கு நிலையம் அருகே இருந்த வளாகத்தில் இருந்த 34 நாய்களும் பத்திரமாக மீட்கப்பட்டன.

விலங்கு நிலையத்தில் தீ ஏற்பட்டபோது அங்கு உரிமையாளர் யாரும் இல்லை. உரிமையாளர்கள் மாலை நேரத்தில்தான் நிலையத்திற்கு வந்தனர்.

தீச்சம்பவம் தொடர்பான படங்களும் நாய்களுக்குத் தீயணைப்பு வீரர்கள் உதவும் படங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

விலங்கு நிலைய உரிமையாளர்களை ஹாங்காங் காவல்துறையினர் எச்சரித்தனர். மேலும் இனி வரும் நாள்களில் அடிக்கடி விலங்கு நிலையத்தில் சோதனை நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்