கொரிய கார் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ; பத்து பேர் பலி

கொரிய கார் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ; பத்து பேர் பலி

1 mins read
6aed5bce-ba55-4923-a2f2-5354b34b23a0
டேஜியோனில் உள்ள தொழிற்சாலையில் தீ மூண்டதால் கரும்புகை வெளியேறியது. - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரிய நகரமான டேஜியோனில் உள்ள கார் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் பத்துப் பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் கடமையாகக் காயம் அடைந்தனர். மேலும் நால்வரைக் காணவில்லை.

வெள்ளிக்கிழமை (மார்ச் 20) தொழிற்சாலையில் தீ மூண்டதாகக் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சு சனிக்கிழமை (மார்ச் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அதிபர் லீ ஜே மியூங், தீயை அணைக்கவும் உயிர்களைக் காப்பாற்றவும் அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து உடனடியாக மத்திய பேரிடர் மேலாண்மைக் கட்டமைப்பு முடுக்கிவிடப்பட்டது.

தொழிலாளர்களில் ஒருவர், தொழிற்சாலைக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இறந்துக் கிடந்தார். இதர ஒன்பது பேர் 3வது மாடித் தரையில் மாண்டு கிடந்தனர் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் அதிகாரிகளை மேற்கோள்காட்டிக் கூறியது.

மார்ச் 21ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மார்ச் 20ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 11.48 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டிருந்தது.

கார் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ‘அன்ஜுன் இண்டஸ்ட்ரியல்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று தீயணைப்பு அதிகாரிகள் கூறினர். அது, ஹியூண்டாய் மோட்டார், கியா கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களைத் தயாரித்து விற்கிறது.

தீ விபத்து குறித்து அன்ஜுன் உடனடியாகக் கருத்து எதையும் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்