ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஸ்கூடாய் நகரில் தீ மூண்டது.
ஸ்கூடாயின் தாமான் ஸ்ரீ புத்திரி வட்டாரத்தில் மூண்ட தீயில் எட்டு உணவுக் கடைகள் சேதமடைந்தன. வர்ததகர் ஒருவரின் இடது கையில் தீக்காயங்கள் ஏற்பட்டன.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிகழ்ந்தது. மாலை 4.44 மணிக்குத் தீ குறித்துத் தகவல் கிடைத்ததாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது என்று மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் குறிப்பிட்டன. தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது அங்கு எட்டு உணவுக் கடைகளைத் தீ சூழ்ந்திருந்ததாகவும் ஒரு யமஹா ஆர்15 மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தீ மூண்ட எட்டு கடைகளில் ஏழின் 90 விழுக்காட்டுப் பகுதிகள் முற்றிலும் அழிந்துபோயின. எட்டாவது கடையின் பாதிப் பகுதியும் அழிந்துபோனது.
மோட்டார் சைக்கிள் கிட்டத்தட்ட முழுமையாக அழிந்துபோனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 7.05 மணிக்குள் தீயணைப்புப் பணிகள் நிறைவடைந்தததாக பெர்னாமா குறிப்பிட்டது.

