நியூயார்க்கில் 30 ஆண்டுகளில் முதல் தட்டம்மை மரணம்

நியூயார்க்கில் 30 ஆண்டுகளில் முதல் தட்டம்மை மரணம்

படம்: ராய்ட்டர்ஸ்

03 Nov 2026 - 7:08 pm

1 mins read

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் தொடர்ந்து பரவிவரும் தட்டம்மைத் தொற்றின் காரணமாக லூயிஸ் கவுன்ட்டியில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று திங்கட்கிழமையன்று (நவம்பர் 2) அறிவிக்கப்பட்டது.

நியூயார்க் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் தட்டம்மையால் பதிவான முதல் மரணம் இதுவாகும். நியூயார்க், அண்டை மாநிலங்களின் பல பகுதிகளில் தட்டம்மைத் தொற்று பரவி வருவதை அடுத்து, மாநில ஆளுநர் கேத்தி ஹோச்சுல் கடந்த அக்டோபரில் மாநிலப் பேரிடர் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார்.

“இந்தத் துயரச் சம்பவத்தை எதிர்கொள்ளவும் தொடரும் தட்டம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆதரவளிக்கும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் சமூக விழிப்புணர்வுப் பணிகளுக்கும் உள்ளூர் தடுப்பூசித் திட்டங்களுக்கும் உதவ லூயிஸ் கவுன்ட்டிக்குத் தேவையான வளங்களை அமைச்சு வழங்கியுள்ளது,” என்று நியூயார்க் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி நிலவரப்படி, நியூயார்க் மாநிலத்தில் 2026ஆம் ஆண்டில் 178 தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் நியூயார்க் நகரத்திற்கு வெளியே 170 பாதிப்புச் சம்பவங்களும் நியூயார்க் நகரத்தில் எட்டு பாதிப்புச் சம்பவங்களும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்