இலவச மதிய உணவுத் திட்டத்தில் மீன் பால்: இந்தோனீசியாவில் பரபரப்பு

இலவச மதிய உணவுத் திட்டத்தில் மீன் பால்: இந்தோனீசியாவில் பரபரப்பு

1 mins read
71492e91-b0f6-4379-89f4-de9d979eef0d
இந்தோனீசிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோ சுபியாந்தோ அறிமுகப்படுத்திய இலவச மதிய உணவு திட்டத்தின் சோதனைக்கட்டத்தில், ​​மேற்கு ஜாவாவின் சுகாபூமி ரீஜென்சியில் உள்ள கெலர்சரி இஸ்லாமிய ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் இலவச மதிய உணவை உட்கொண்டனர். - படம்: ஷலாஹுதீன் சனுசி
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபோவோ சுபியாந்தோவின் இலவச மதிய உணவுத் திட்டத்தில் “மீன் பால்” சேர்க்கத் திட்டமிட்டிருப்பது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மீன் புரதத்திலிருந்து தயாரிக்கப்படும் அந்த உணவுப் பொருள் உண்மையிலேயே ஆரோக்கியமானதா விழுங்குவதற்குக் கடினமான உணவா போன்ற கேள்விகளைச் சிலர் எழுப்பியுள்ளனர்.

அந்நாட்டு உள்ளூர் உணவு நிறுவனமான ‘ஐடி ஃபுட்’ நிறுவனத்தின் தலைவர் சிஸ் அபிக் விஜயந்தோ, பசும்பாலுக்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்கள் குறித்த ஆய்வுகள் எவ்வாறு நடந்து வருகின்றன என்பதைப் பற்றி இம்மாதத் தொடக்கத்தில் கூறினார்.

அதிலிருந்து, இலவச மதிய உணவுத் திட்டத்தில் மீன் பாலைச் சேர்ப்பது குறித்த பேச்சுகள் தொடங்கின.

“பசும்பாலுக்கு மாற்றாக பாலின் சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்கள் வேறு இருக்கலாம். அவற்றைக் குறித்து ஆராய்ந்து வருகிறோம். உதாரணமாக, மீனிலிருந்து கிடைக்கும் பால்,” என்று அவர் ஜகார்த்தாவில் செப்டம்பர் 4ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைமுறைக்கு வரும் இத்திட்டத்தில் மீன் பால் சேர்ப்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்