தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேல் எழுப்பிய ஐந்து மீட்டர் உயர வேலி; மிகப்பெரிய சிறைச்சாலை உருவானது

1 mins read
8f9103fd-0adc-4b35-bfc2-03497bb02923
சிஞ்சிலில் இஸ்ரேல் எழுப்பிய வேலி. - படம்: ராய்ட்டர்ஸ்

சிஞ்சில் (மேற்கு கரை): இஸ்ரேல் ஆக்கிரமத்துள்ள மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீன நகரான சிஞ்சிலின் ஒரு பகுதியை வளைத்து இஸ்ரேல் ஐந்து மீட்டர் உயரத்துக்கு வேலி போட்டுள்ளது.

அப்பகுதியை 24 மணிநேரமும் இஸ்ரேலிய வீரர்களும் காவலர்களும் கண்காணித்து  வருகின்றனர். இதையடுத்து அது ஒரு மிகப்பெரிய சிறைச்சாலையாக உருவாகியிருக்கிறது.

“சிஞ்சில் தற்போது மிகப்பெரிய சிறை”, என்று ஏழு குழந்தைகளுக்குத் தந்தையான 52 வயது மூசா ஷாபானா தெரிவித்தார். நகரின் மத்தியில் தோட்டத்திற்கு நடுவில் வேலி அமைக்கப்பட்டதால் வருமானத்துக்காக அங்கு  அவர் வளர்த்து வந்த மரங்களை விற்றுவிட்டார்.

இப்போது தோட்டத்திற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லா மரங்களும் எரிந்து நாசமாகிவிட்டன. எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என்றார் அவர்.

மேற்கு கரையில் குறைந்தது மூன்று மில்லியன் பாலஸ்தீன மக்களுக்காக சுவரையும் சோதனைச் சாவடிகளையும் இஸ்ரேலியப் படைகள் எழுப்பியிருக்கின்றன.

காஸா போர் தொடங்கியிலிருந்து அங்குள்ள நகரங்களும் கிராமங்களும் முற்றுகையில் இருந்து வருகின்றன. சிஞ்சில்லைச் சுற்றியுள்ள தடுப்பு, அவ்வட்டாரம் முழுவதும் பல இடங்களில் போடப்பட்டுள்ள தடுப்புகளுக்கு ஓர் உதாரணம். அருகில் உள்ள ரமலா-நப்லுஸ் நெடுஞ்சாலையைப் பாதுகாக்க வேலி அமைக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

“அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதால் முக்கிய பாதையில் கல் எறிவதைத் தடுப்பதற்காகவும் மக்களைப் பாதுகாக்கவும் வேலியமைக்க முடிவு செய்யப்பட்டது,” என்று இஸ்ரேல் தனது அறிக்கையில் கூறியது.

இன்னமும் குடியிருப்பாளர்கள் ஒரே ஒரு வாயில் வழியாக வெளியே செல்லவும் நுழையவும் அனுமதிக்கப்படுகின்றனர் என்று ராணுவம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்