பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கோத்தா டமான்சாராவிலும் பெட்டாலிங் ஜெயாவிலும் நவம்பர் 12ஆம் தேதி காலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஐந்து வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறைக்குக் காலை 8.09 மணி அளவில் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
திடீர் வெள்ளம் ஏற்பட்ட இரு இடங்களிலும் வெள்ளநீர் வடிந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.