கோலாலம்பூர்: மலாக்காவில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசியக் குடிமைத் தற்காப்பு படையினர் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
382 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் ஏற்படும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
மலாக்கா தெங்காவில் 165 நிலையங்கள், அலோர் கஜாவில் 125 நிலையங்கள், ஜசின் வட்டாரத்தில் 92 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளம் ஏற்பட்டுவிட்டால் விரைவாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள 32 படகுகள், 32 படகு இயந்திரங்கள், 31 படகு இழுவைகள், 13 அவசர உதவி வாகனங்கள், 12 கனரக வாகனங்கள், ஐந்து மீட்பு லாரிகளும் தயார் நிலையில் இருப்பதாகக் குடிமைத் தற்காப்பு படையினர் கூறினர்.

