தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் வெள்ளம்; 601 பேர் பாதிப்பு

1 mins read
5c3f1de3-5ba9-4ca2-8db0-6e934bdbf57f
வெள்ளத்தால் 163 குடும்பங்களைச் சேர்ந்த 601 பேர் தற்காலிகத் துயர்துடைப்பு நிலையங்களில் தங்குவதாக ஜோகூர் மாநிலத்தின் பேரிடர் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. - படம்: மலேசிய ஊடகம்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் அக்டோபர் 6ஆம் தேதியன்று கனமழை பெய்ததை அடுத்து, வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளத்தால் 163 குடும்பங்களைச் சேர்ந்த 601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்காலிகத் துயர்துடைப்பு நிலையங்களில் தங்குவதாக ஜோகூர் மாநிலத்தின் பேரிடர் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

பாதிப்படைந்தோரில் பெரும்பாலானோர் குளுவாங்கைச் சேர்ந்தவர்கள் (334 பேர்).

பொந்தியானைச் சேர்ந்த 250 பேரும் பத்து பாகாட்டைச் சேர்ந்த 17 பேரும் துயர்துடைப்பு நிலையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்