தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெள்ளம்: மோசமான நிலையில் ஜோகூர்

1 mins read
d515384d-1358-42c7-a226-0f1143dfc61d
ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஐந்து ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தொட்டுள்ளது. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் வெள்ள நிலவரம் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக முகாம்களில் தங்கியிருப்போர் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஐந்து ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தொட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெர்சிங், பத்து பகாட், கோத்தா திங்கி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் உள்ளது.

இந்நிலையில், கிளந்தானில் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. திரெங்கானுவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

கிளந்தானில் உள்ள தற்காலிக முகாம்களில் 476 பேர் உள்ளனர். நிலைமை சரியாகி வருவதால் முகாம்களிலிருந்து மக்கள் அவர்களது வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்