இந்தோனீசியாவில் வெள்ளம், நிலச்சரிவு; மாண்டோர் எண்ணிக்கை 303 ஆக உயர்வு

இந்தோனீசியாவில் வெள்ளம், நிலச்சரிவு; மாண்டோர் எண்ணிக்கை 303 ஆக உயர்வு

படம்: ராய்ட்டர்ஸ்

29 Nov 2025 - 9:18 pm

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 303ஆக உயர்ந்துள்ளது.

இத்தகவலை அந்நாட்டு நாட்டின் பேரிடர் தணிப்பு நிலையத்தின் தலைவர் சனிக்கிழமையன்று (நவம்பர் 29) தெரிவித்தார்.

மலாக்கா நீரிணையில் உருவான சூறாவளியால், இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து அகிய நாடுகளில் கடந்த ஒரு வாரமாகக் கனமழை கொட்டிதீர்த்து வருகிறது.

குறைந்தது 279 பேரைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

சுமத்ராவில் வெள்ளம், நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மூன்று வட்டாரங்களிலிருந்து 80,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிகளில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, தகவல் தொடர்பின் உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தீவின் வடக்குப் பகுதியில், உதவி வழங்கவும் தளவாடப் பணிகளுக்காகவும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாவெள்ளம்உயிரிழப்பு