திலி: திமோர் லெஸ்டேவின் முன்னாள் அதிபர் ஃபிரான்சிஸ்கோ குட்டரெஸ் கடந்த வார இறுதியில் மலேசியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானதைத் தொடர்ந்து, ஒருவார துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாடு திங்கட்கிழமை (ஜூன் 22) அறிவித்தது.
71 வயதான திரு குட்டரெஸ், 2017 முதல் 2022 வரை திமோர் லெஸ்டே அதிபராகப் பதவி வகித்தார். அந்நாட்டின் சுதந்திரத்திற்கு வழிவகுத்த பல்லாண்டுகால அரசியல், ஆயுதமேந்தியப் போராட்டங்களில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
திரு குட்டரெசின் மறைவையொட்டி, தலைநகர் திலியில் உள்ள பொதுக் கட்டடங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் அனைத்திலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு திமோர் லெஸ்டே அரசாங்கம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உத்தரவிட்டது.
திரு குட்டரெசின் உடல் செவ்வாய்க்கிழமை திமோர் லெஸ்டே தலைநகருக்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவரின் சகோதரர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

