தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் ரத்த அழுத்தத்தால் அவதி

2 mins read
e4f00309-22cd-45a0-9f38-0f264b20ceba
குளோங் பிரெம் சிறைச்சாலையில் இருக்கும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ‌ஷினவாத்தை அவரது குடும்பத்தினர் நேரில் சென்று சந்தித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ‌ஷினவாத் உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, முடி உதிர்தல் ஆகிய பிரச்சினைகளால் அவதியுறுவதாக அவரது மகள் பெத்தோங்தார்ன் கூறியுள்ளார்.

குளோங் பிரெம் சிறைச்சாலையில் இருக்கும் 76 வயது திரு தக்சின்னை அவரது குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) சந்திக்கச் சென்றனர்.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்களில் ஒருவருமான திருவாட்டி பெடோங்டார்ன் ‌ஷினவாத், தமது கணவர், மூத்த சகோதரி பின்டொங்டா ‌ஷினவாத், அவரது கணவர் ஆகியோருடன் திரு தக்சினைச் சிறையில் சென்று கண்டார். திரு தக்சினை அவரது குடும்பத்தினர் நேரில் சென்று சந்திப்பது இது இரண்டாவது முறை.

சிறைச்சாலை வளாகத்திலிருந்து வந்த திருவாட்டி பெடோங்டார்ன், 15 நிமிடங்களுக்கு மட்டுமே திரு தக்சினைச் சந்திக்க முடிந்ததாகக் கூறினார்.

“தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் இன்று துரிதமாக வந்துவிட்டோம்,” என்றார் திருவாட்டி பெத்தோங்தார்ன்.

திரு தக்சினுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், சோர்வடைந்திருப்பதாகவும் கூறியதைத் திருவாட்டி பேடோங்டார்ன் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் இருக்கும் திரு தக்சினால் சரியாக உணவு உட்கொள்ள முடிகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார் திருவாட்டி பெடோங்டார்ன்.

திரு தக்சினின் குடும்பம் சிறைச்சாலைக்குமுன் வந்தபோது சிவப்புச் சட்டை அணிந்திருந்த ஆதரவாளர்கள் சிலர் ஐந்து தாயத்துகளையும் அதிகம் மதிக்கப்படும் புத்தப் பிக்கு ஒருவரின் புகைப்படத்தையும் திருவாட்டி பெடோங்டார்னிடம் கொடுத்தனர்.

அனுமதி இல்லாததால் அந்தத் தாயத்துகளைத் திருவாட்டி பெடோங்டார்ன் சிறைச்சாலை வளாகத்துக்குள் கொண்டுசெல்லவில்லை.

புதிய சிறைக்கதிகளுக்கான வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளின்போது திரு தக்சின் மனநல ஆலோசகரையும் சந்திப்பதாகச் சிறைச்சாலையின் சீர்திருத்தப் பிரிவின் துணைப் பேச்சாளர் கூறினார்.

திரு தக்சின் பெரும்பாலும் காலை 6 மணிக்கெல்லாம் எழும்பி இரவு 9.30 மணிக்கு தூங்கச் செல்வதாகவும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்