அரிவாளால் ஒருவரின் கையைத் துண்டாக்கிய நான்கு நண்பர்கள்

அரிவாளால் ஒருவரின் கையைத் துண்டாக்கிய நான்கு நண்பர்கள்

1 mins read
நீதிபதி நால்வருக்கும் தலா 15,000 ரிங்கிட் பிணைத் தொகையை அறிவித்தார். ஏப்ரல் 15 அன்று மீண்டும் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.
4205611c-2af8-46a3-bed6-0f8c75a74476
எஸ்.ஜி.கிஷியன் 29, எஸ்.யோகயோகன் 26, எஸ்.ஹெகணேஷ்வரன் 28, கே.கே. சர்விந்திரன் 23, ஆகிய நான்கு நண்பர்களும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜார்ஜ்டவுன்: ஒருவரின் கையை அரிவாளால் வெட்டித் துண்டாக்கிய நான்கு நண்பர்கள் மீது பினாங்கு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) குற்றஞ்சாட்டப்பட்டது.

எஸ்.ஜி.கிஷியன் 29, எஸ்.யோகயோகன் 26, எஸ்.ஹெகணேஷ்வரன் 28, கே.கே. சர்விந்திரன் 23, ஆகிய நான்கு நண்பர்களும் நீதிபதி இர்வான் சுஹைன்பொன் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அவர்களது வழக்கறிஞர் மூலமாகத் தெரியப்படுத்தினர்.

பினாங்கில் உள்ள ஒரு கார் காட்சியகத்துக்கு வெளியே பிப்ரவரி 25ஆம் தேதி காலை 8 மணியளவில் எஸ். பிரஷான்ராஜ் என்ற 33 வயது ஆடவரை வெட்டிவிட்டு அந்த நால்வரும் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

அவர்கள் அந்த ஆடவரை திட்டமிட்டுத் தாக்கியுள்ளனர். அவர்கள்மீது குற்றவியல் சட்டம் பிரிவு 120B, பயங்கர ஆயுதத்தால் காயம் விளைவித்ததற்கு பிரிவு 326-ன்கீழ் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 20 ஆண்டு சிறை, அபராதம், பிரம்படி தண்டனைகள் அவர்களுக்கு விதிக்கப்படலாம்.

நீதிபதி நால்வருக்கும் தலா 15,000 ரிங்கிட் பிணைத் தொகையை அறிவித்தார். ஏப்ரல் 15 அன்று மீண்டும் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்