தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்லைப் பூசலில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி: தாய்லாந்து அரசாங்கம்

2 mins read
e0c23fd8-6ee6-4e36-80d9-5d2eea48414b
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் கடுமையான சண்டை மூண்டதை அடுத்து மக்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லந்து-கம்போடிய எல்லையில் மூண்ட பூசலால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தாய்லாந்து அரசாங்கம் விரிவான உதவித்தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.

பூசலில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையைத் துரிதமாக தொகுக்கும்படி துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமாகச் சேவையாற்றும் இடைக்கால பிரதமர் பும்தாம் வீ‌‌‌சாய‌‌‌ச்சாய் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிட்டதாக பிரதமர் அலுவலகப் பேச்சாளர் திரு ஜிராயு ஹுவாங்சப் கூறினார்.

பிரதமர் அலுவலகத்தின்கீழ் செயல்படும் பேரிடர் நிவாரண நிதிக் குழு குடிமக்கள், அரசாங்க ஊழியர்கள், ராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், எல்லைக் கண்காணிப்பு வீரர்கள் என சண்டையில் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்கியது.

மாண்டோர் குடும்பத்துக்கு 1 மில்லியன் பாட், நிரந்தர உடற்குறைபாடு ஏற்பட்டோருக்கு 700,000 பாட், கடுமையாகக் காயமடைந்தோருக்கு 200,000 பாட், மிதமாகக் காயமடைந்தோருக்கு 100,000 பாட் என நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

தாய்லாந்து கம்போடிய எல்லைப் பகுதியிலிருந்து தப்பியோடிய மக்களுக்குப் பல்வேறு அமைப்புகள் உதவி வருகின்றன.
தாய்லாந்து கம்போடிய எல்லைப் பகுதியிலிருந்து தப்பியோடிய மக்களுக்குப் பல்வேறு அமைப்புகள் உதவி வருகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும் மனநல ஆதரவுக்கும் தேவைப்படும் உதவியை துரிதமாகச் செய்யும்படி சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார் துணைப் பிரதமர் பிரபான் சலிரதவிபகா.

பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி உதவும்படியும் அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

உடனடி நிவாரணத்துக்குப் பிரதமர் அலுவலக நிதியிலிருந்து பணம் எடுக்கப்படும்.

ஜூலை 25 நிலவரப்படி 4 எல்லைப் பகுதிகளிலிருந்து வெளியேறிய 100,672 பேர் அவசர முகாம்களில் தஞ்சமடைந்ததாகத் தாய்லாந்து உள்துறை அமைச்சு தெரிவித்தது.
ஜூலை 25 நிலவரப்படி 4 எல்லைப் பகுதிகளிலிருந்து வெளியேறிய 100,672 பேர் அவசர முகாம்களில் தஞ்சமடைந்ததாகத் தாய்லாந்து உள்துறை அமைச்சு தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இதற்கிடையே, கம்போடியாவுடனான சண்டையை நிறுத்த மூன்றாம் தரப்பு நாடுகள் முன்வைத்த பேச்சுவார்த்தைகளைத் தாய்லாந்து நிராகரித்துள்ளது.

கம்போடியா அதன் தாக்குதல்களை நிறுத்தி இருதரப்புக் கலந்துரையாடல் மூலம் மட்டும் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

அமெரிக்கா, சீனா உள்பட ஆசியானுக்குத் தற்போது தலைதாங்கும் மலேசியா ஆகியவை பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய முன்வந்தபோதும் இருதரப்புத் தீர்வை மட்டும் எதிர்பார்ப்பதாகத் தாய்லாந்து தெரிவித்தது.

“மூன்றாம் தரப்பு நாடுகளில் சமரசப் பேச்சு இப்போதைக்குத் தேவையில்லை என்று நினைக்கிறோம்,” என்றார் தாய்லாந்து வெளியுறவு அமைச்சு பேச்சாளர் நிகொர்ன்டெஜ் பாலன்குரா.

குறிப்புச் சொற்கள்