உக்ரேன்மீது கவனம் செலுத்தும் ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்

உக்ரேன்மீது கவனம் செலுத்தும் ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்

VIA REUTERS

09 Nov 2026 - 6:27 pm

2 mins read

பாரிஸ்: அமெரிக்காவில் நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப் தோல்வியடைந்ததை அடுத்து உக்ரேனிலும் மத்திய கிழக்கிலும் நிலவும் போர் தொடர்பில் டிரம்ப் அரசாங்கத்தின் அணுகுமுறை மாறுமா என்பது குறித்து கலந்துரையாடப்படும் என்று ஜி7 பேராளர்கள் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை (நவம்பர் 9) பாரிசில் ஒன்றுகூடும் ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அதுபற்றி பேசவிருக்கின்றனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்சில் பல வாரங்களாகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் பாதுகாப்பு கருதி மார்சேவில் நடைபெறவிருந்த கூட்டம் கடைசி நேரத்தில் பாரிசிற்கு மாற்றப்பட்டது.

அதில், 2028ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று உத்தேசிக்கப்படும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கலந்துகொள்ளவிருக்கிறார்.

தேர்தல் முடிந்து ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைத் திரு ரூபியோ நேரில் சந்திப்பது இதுவே முதன்முறை.

பிரான்சைத் தவிர்த்து பிரிட்டன், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ஜி7 அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

உக்ரேன், சவூதி அரேபியா, எகிப்து, தென்கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் பாரிஸ் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

ஜி7 கூட்டத்தில் கலந்துரையாடப்படும் விவகாரங்களில் உக்ரேன் முதலிடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டது.

குளிர்காலத்தின்போது நாடளவிய மின்சாரத் துண்டிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பை ர‌ஷ்யா குறிவைப்பதாகப் பேராளர்கள் கூறினர்.

‘பேட்ரியாட்’ ரக இடைமறிப்பு ஏவுகணைகள், பிற வான் பாதுகாப்பு அமைப்புகளின் பற்றாக்குறையே உக்ரேனின் அவசரத் தேவையாக உள்ளது என்றும் ரஷ்யாவுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, உக்ரேனுக்குக் கூடுதல் இராணுவ, நிதி, ஆற்றல் சார்ந்த ஆதரவைத் திரட்டுவதே ஜி7 கூட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்