மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ சிட்டியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கவிழ்ந்த எரிவாயு லாரி தீப்பிடித்துக்கொண்டதை அடுத்து, வெடித்துச் சிதறியது.
வெடிப்பின் காரணமாகக் குறைந்தது மூவர் மாண்டனர், 70 பேர் காயமடைந்தனர்.
இத்தகவலை மெக்சிகோ அதிகாரிகள் வெளியிட்டனர்.
எரிவாயு லாரி வெடித்ததில் அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
தீயை அணைக்கத் தீயணைப்பாளர்கள் போராடியதையும் தீக்கு இரையாகிய எரிவாயு லாரி மற்றும் வாகனங்களையும் ஆளில்லா வானூர்தி மூலம் எடுக்கப்பட்ட படங்கள் காட்டின.
காயம் அடைந்த பலருக்கு மிகக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.