தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
வடக்கு காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்

1 mins read
0d5bfc52-c1d9-4955-8cbd-02b63273a344
மத்திய காஸா பகுதியில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நுசெய்ரத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சேதத்தை ஆராயும் பாலஸ்தீனர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: வடக்கு காஸா மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் குடிமைத் தற்காப்பு மீட்புப் படை தெரிவித்தது.

“ஜபாலியா அல் நஸ்லாவில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் ஏழு பிள்ளைகளும் அடங்குவர். அச்சிறுவர்களில் ஆக மூத்தவருக்கு வயது ஆறு,” எனக் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் மஹ்முட் பசால் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் 15 பேருக்குக் காயம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

ஹமாசுக்குச் சொந்தமான ராணுவ அமைப்பில் இயங்கிக்கொண்டு இருந்த “சில பயங்கரவாதிகளை” தான் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. அந்தப் பகுதியில் செயல்படும் இஸ்ரேலியத் தற்காப்புப் படைக்கு அவர்கள் அச்சுறுத்தலாக விளங்கியதாக ராணுவம் சொன்னது.

இந்நிலையில், வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, இஸ்ரேலியத் தற்காப்புப் படையிடம் உள்ள தகவலுடன் ஒத்திருக்கவில்லை என்று அது கூறியது.

“அனைத்துலகச் சட்டத்துக்கு உட்பட்டு, காஸா பகுதியில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேலியத் தற்காப்புப் படை ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது,” என்று அது மேலும் கூறியது.

அக்டோபரின் தொடக்கத்தில் வடக்கு காஸாவில் பேரளவிலான ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்