சரிவுக்குப் பிறகு மீண்ட தங்க, வெள்ளி விலைகள்

1 mins read
f39c8360-cb89-4137-a791-3e679a54d577
2025ல் தங்க விலை 66 விழுக்காடும் வெள்ளி விலை, 154 விழுக்காடும் உயர்ந்தன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நியூயார்க்: தங்க, வெள்ளி விலைகள் செவ்வாய்க்கிழமை சரிவுக்குப் பிறகு மீண்டும் கொஞ்சம் உயர்ந்துள்ளன. திங்கட்கிழமை அவற்றின் விலைகள் வீழ்ச்சி கண்டன.

தங்கத்தின் விலை 5 விழுக்காடு சரிந்தது. அக்டோபர் 21ஆம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் அந்த அளவுக்குக் குறைந்தது அது முதன்முறை. வெள்ளியின் விலை 11 விழுக்காடு வீழ்ச்சி கண்டது. 2020ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு அவ்வளவு பெரிய சரிவை வெள்ளி சந்திக்கவில்லை.

செவ்வாய்க்கிழமை, இரண்டு உலோகங்களின் விலைகளும் சற்றுக் கூடின. சிங்கப்பூரில் ஒரு கிராம் தங்கத்தின் விலை $175.70. தங்க விலை, அவுன்சுக்கு $4,378.16.

வெள்ளியின் விலை மாலை சுமார் 5.15 மணி நிலவரப்படி அவுன்சுக்கு $95.49ஆக இருந்தது.

தங்கத்தின் விலை இந்த ஆண்டில் (2025) 66 விழுக்காடு கூடியுள்ளது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டது, அமெரிக்கக் கொள்கை மேலும் தளர்த்தப்பட்டது, உலக அளவில் அரசியல் பூசல்கள் ஏற்பட்டது, மத்திய வங்கிகளின் தேவை அதிகரித்தது முதலியவை அதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

வெள்ளியின் விலை, இந்த ஆண்டில் 154 விழுக்காடு உயர்ந்துள்ளது. விநியோக நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்பட்டது, இருப்பு குறைந்தது போன்றவை அதற்குக் காரணங்கள் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்