மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள தங்க விலை

மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள தங்க விலை

1 mins read
2b23d942-ffec-42bd-b047-6749a290cd45
பிப்ரவரி 3ஆம் தேதி தங்கத்தின் விலை 5.9 விழுக்காடு உயர்ந்தது. - படம்: ஃபுளும்பர்க்

நியூயார்க்: தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை (பிப்ரவரி 4) தங்கத்தின் விலை இரண்டு விழுக்காடு உயர்ந்தது.

காலை 9.12 மணிக்கு ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,044.74 அமெரிக்க டாலராக இருந்தது.

அதேபோல் பிப்ரவரி 3ஆம் தேதி தங்கத்தின் விலை 5.9 விழுக்காடு உயர்ந்தது. இதன்மூலம் 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் ஒரே நாளில் இந்த அளவுக்குத் தங்கம் விலை ஏறியுள்ளது.

அதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க டாலரின் விலை மதிப்பு குறைவதும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதும் ஆகும்.

கடந்த மாதம் 29ஆம் தேதி ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,594.82 அமெரிக்க டாலராக இருந்தது. அது வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சமாகும்.

பிப்ரவரி 3ஆம் தேதி அமெரிக்க டாலரின் மதிப்பு முக்கியமான நாடுகளின் பணத்திற்கு எதிராக வீழ்ச்சியடைந்தது.

குறிப்புச் சொற்கள்