தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூசிலாந்துக் கடற்கரை மணலில் தங்கத் துகள்கள்

1 mins read
24c25d63-1b75-49d8-8cbd-9af8b16c3d36
நியூசிலாந்துக் கடற்கரை மணலில் தங்கத்துகள்கள். - படம்: டேவ் குரோ/9news.com.au இணையத்தளம்

நியூசிலாந்தின் தென் தீவுக் கடற்கரை மணலில் தங்கத் துகள்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒட்டாகோ பல்கலைக்கழகப் புவியியல் துறையின் ஓய்வுபெற்ற கௌவரப் பேராசிரியர் டேவ் குரோ கடற்கரை மணலில் தங்கத் துகள்கள் இருப்பதைக் காட்டும் படத்தை வெளியிட்டார்.

உலகில் கடற்கரை மணலில் தங்கத் துகள்கள் இருப்பதைக் காட்டும் அத்தகைய புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட பெருமை பேராசிரியர் குரோவைச் சேரும்.

நியூசிலாந்தில் 1800களில் தங்கத்துக்கான வேட்டை இடம்பெற்றபோது கடற்கரை மணல் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கலாம் என்று பேராசிரியர் டேவ் குரோ சொன்னார்.

தென் தீவின் கடற்கரையில் பெரும்பாலோர் கவனிக்காத தங்கத் துகள்களை ஆராயும் நோக்கத்தில் ஆய்வுகளை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

மின்நுண்ணோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்கள் ஆராயப்பட்டன. சௌத்லேண்ட் பகுதியில் 10 மைக்ரோமீட்டர் அளவிலான சிறிய துகள்கள் காணப்பட்டதாக ஆதாரங்கள் காட்டுகின்றன. அது மனித முடியின் அகலத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்றார் பேராரிசியர் குரோ.

குறிப்புச் சொற்கள்