குடும்பக் கடனைச் சமாளிக்க உதவும் திட்டத்திற்குத் தாய்லாந்து அரசு ஒப்புதல்

1 mins read
451cb5e5-5cd7-4917-95fa-9eb809ec0b37
தாய்லாந்து பிரதமர் பேடோங்­டார்ன் ஷின­வத்ரா. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்து குடும்பங்கள் தங்கள் மொத்த கடன் சுமைகளைச் சமாளிக்க உதவும் வகையில், தற்காலிக வட்டி நீக்கம், குறைக்கப்பட்ட அசல் தொகை கட்டணங்கள் உள்ளிட்ட கடன் ஆதரவு நடவடிக்கைகளுக்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் பேடோங்­டார்ன் ஷின­வத்ரா புதன்கிழமையன்று (டிசம்பர் 11) வெளியிட்டார்.

தாய்லாந்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சில்லறை கடன் வாங்குபவர்களுக்கும் சிறிய முதலீடு வர்த்தகங்களுக்கும் உதவும் எனச் செய்தியாளர்களின் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு வங்கிகள் தங்கள் வைப்புத்தொகையின் குறைக்கப்பட்ட வருடாந்தர பங்களிப்பாக 0.23 விழுக்காட்டை நிதி நிறுவனங்களின் மேம்பாட்டு நிதிக்கு செலுத்த அனுமதிக்கும் திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து நிதி அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குறைக்கப்பட்ட வருடாந்தர பங்களிப்பு, கடன் பெற்றவர்களை ஆதரிக்க வங்கிகளுக்கு உதவும் என அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்