காஸா: காஸாவிலிருந்து உயிரிழந்த மற்றொரு பிணைக்கைதியின் சடலங்களைச் செஞ்சிலுவைச் சங்கம் தன்னிடம் ஒப்படைத்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
காஸாவில் ஹமாஸ் வசம் உள்ள 28 பிணையாளிகளின் சடலங்களில் இது பத்தாவது.
இடிபாடுகளின்கீழ் சிக்கியுள்ள சடலங்களை மீட்க கனமான உபகரணங்களும் அகழாய்வு செய்யும் கருவிகளும் தேவைப்படுவதாக ஹமாஸ் சொன்னது.
ஆனால், ஹமாஸ் தரப்பு பிணையாளிகளின் சடலங்கள் எங்கிருக்கின்றன என்பதை அறிவார்கள் என்று வலியுறுத்திய இஸ்ரேல், காலம் தாழ்த்தவேண்டாம் என்றது.
இருப்பினும், சண்டைநிறுத்த உடன்பாட்டை நிறைவேற்றவும் எஞ்சிய பிணையாளிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதிலும் உறுதியுடன் இருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டது.
மற்றொரு பிணையாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் அது ஒப்படைக்கப்படும் என்றும் அக்டோபர் 17ஆம் தேதி ஹமாஸ் சொன்னது.
ஆனால் உள்ளூர் நேரப்படி பின்னிரவு 12.30 மணிக்குத்தான் செஞ்சிலுவைச் சங்கத்திடம் பிணையாளியின் சடலம் ஒப்படைக்கப்பட்டதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.
அது சண்டைநிறுத்த உடன்பாட்டைக் கேள்விகுறியாக்குவதாகக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேல் இதைக் காரணங்காட்டி சண்டைநிறுத்த உடன்பாட்டை மீறுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.

