தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிணைக்கைதியாக இருந்த தாய்லாந்து நாட்டவர் ஐவரை விடுவித்த ஹமாஸ்; ஆனந்தக் கண்ணீரில்பெற்றோர்

1 mins read
206af008-156e-4090-918b-9894a7231487
தன் மகனை ஹமாஸ் விடுவித்த செய்தியைத் தன் உறவினருடன் கண்ணீர் மல்க பகிர்ந்த வாட்சராவின் தாய். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

பேங்காக்: ஹமாஸ் அமைப்பினர் தடுத்துவைத்த பிணைக்கைதிகளைக் கட்டங்களாக விடுவித்து வருகின்றனர். தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்ததையடுத்து ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை ஹமாஸ் நிறைவேற்றி வருகிறது.

ஜனவரி 30ஆம் தேதி, ஐவர் அடங்கிய பிணைக்கைதி குழு ஒன்றை ஹமாஸ் விடுவித்தது. அவர்கள் ஐவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். வாட்சரா ஸ்ரீ-உவான், சுராசக் லாம்னாவ் ஆகியோர் விடுவிக்கப்பட்ட குழுவில் அடங்குவர்.

தன் மகன் விடுவிக்கப்பட்டதை அறிந்து வாட்சராவின் பெற்றோர் மகிழ்ச்சியும் மனநிம்மதியும் அடைந்தனர். மீண்டும் தன் மகனை வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாக அனுப்பமாட்டேன் என வாட்சராவின் தாய் கண்ணீர் மல்க கூறியதாக ‘தி நேஷன்’ தெரிவித்தது.

மேலும், தன் மகன் விடுவிக்கப்பட்ட செய்தியை தன் பேத்தி ஜனவரி 29ஆம் தேதி தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.

தன் மகன் விடுவிக்கப்படுவதை எண்ணி எல்லையில்லா ஆனந்தம் அடைந்ததாக விடுவிக்கப்பட்ட மற்றொரு தாய்லாந்து நாட்டவரான சுராசக்கின் பெற்றோர் கூறினர். அவருடைய தாய் சுராசக்கை விமான நிலையத்தில் சந்திக்க வேண்டுமெனவும் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டு வரவேற்க வேண்டும் எனத் தான் எண்ணியிருப்பதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்