ஹண்டா தொற்று, கட்டுக்குள் வந்ததாக ஜூலை 2ல் அறிவிப்பு

ஹண்டா தொற்று, கட்டுக்குள் வந்ததாக ஜூலை 2ல் அறிவிப்பு

2 mins read
தடுப்பூசிக்கான ஆய்வுகள் தொடர்கின்றன
34f029ea-ed82-4b82-8cbc-a08982741c01
இவ்வாண்டு மே மாதம் 25ஆம் தேதி ஸ்பெயினின் டெனரிஃப் தீவில் நங்கூரமிட்ட ஹொண்டியாஸ் சொகுசுக் கப்பல். - படம்: ஏஎஃப்பி

ஜெனீவா: ஒரு சொகுசுக் கப்பலில் மே மாதத்தில் முதன்முதலாகப் பரவிய ஹண்டா வகை தொற்றுநோய், கட்டுக்குள் வந்துவிட்டதாக ஜூலை 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் புதன்கிழமை (ஜூன் 24) தெரிவித்தது.

தொற்றுப் பரவலால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு விரைவில் அவ்வேதனை முடிவுக்கு வந்தாலும், அதனை எதிர்த்து போராடும் விஞ்ஞானிகளுக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் இனிமேல்தான் சவால்கள் தொடங்குகின்றன.

அந்நோய் சார்ந்த மருத்துவ ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையில் உள்ளன.

எதிர்காலத்தில் அந்தத் தொற்றைக் கையாள்வதற்கான வழிவகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வருகின்றனர்.

கிருமியின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தடுப்பூசிகள் தயாரிக்கும் சாத்தியங்கள் உள்ளனவா என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

எம்வி ஹொண்டியஸ் என்ற கப்பலில் அந்தத் தொற்று முதலில் கண்டறியப்பட்டது. தொற்றினால் மூன்று நோயாளிகள் மரணமடைந்தனர்.

அதனால் அனைத்துலக அளவில் சுகாதார விழிப்புணர்வு ஏற்பட்டு அக்கப்பலின் பயணிகள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அர்ஜென்டினாவில் தொடங்கிய கப்பல் பயணம் பல நாடுகளைக் கடந்து இறுதியாக ஸ்பெயினில் முடிவடைந்தது. அனைத்து பயணிகளும் அங்கு வெளியேறினர்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மொத்தமாக 650 நபர்கள் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தில் அடையாளம் காணப்பட்டு 33 நாடுகளில் சோதனைக்கு உள்ளாகினர்.

அவ்வாறு அடையாளம் காணப்பட்டோரில் 54 நபர்களைத் தவிர மற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவச் சோதனைகள் முடிவடைந்துவிட்டன.

மீதம் உள்ளோர்கள் ஜூலை 2ஆம் தேதி தனிமைப்படுத்தப்படும் முறையை முடித்துவிடுவர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானொம், ஜெனீவாவில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தொற்றுநோய்தடுப்பூசிமருத்துவம்ஆய்வுஆராய்ச்சிஉலக சுகாதார நிறுவனம்