புகைமூட்டத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏசியா பல்ப் & பேப்பர் உள்ளிட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த பத்து நிறுவனங்களுக்குத் தேசிய சுற்றுப்புற அமைப்பு சட்டபூர்வ அறிவிப்புகளை அனுப்பியுள்ளது.
புகைமூட்டத்துக்குக் காரணமான இந்தோனீசிய காட்டுத்தீயுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான தனது விசாரணையை சிங்கப்பூர் விரிவுபடுத்தி வருகிறது.
அந்த வகையில், சிங்கப்பூரில் செயல்படும் மேலும் 10 நிறுவனங்களுக்கு சட்டபூர்வ அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தோனீசியத் தீயுடன் தங்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்தும், கூடுதல் ஆவணங்கள் மற்றும் தகவல்களை வழங்குமாறும் அந்நிறுவனங்கள் அந்த அறிவிப்புகள் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், சிங்கப்பூரின் எல்லைதாண்டிய புகைமூட்டத் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் பத்து நிறுவனங்களை தேசிய சுற்றுப்புற அமைப்பு பட்டியலிட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள் பாமாயில் தொழில் அல்லது வனவியல் தொழிலில் ஈடுபட்டுள்ளன. மேலும், இவை இந்தோனீசியாவில் நிலச் சலுகைகளை சொந்தமாகக் கொண்டுள்ளன அல்லது அத்தகைய சலுகைகளைக் கொண்ட தொடர்புடைய நிறுவனங்களைக் கொண்டுள்ளன.
அவற்றில் ஐந்து நிறுவனங்கள் சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்னர், பத்து இந்தோனீசிய நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சட்டபூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டது.
